இந்த வார கேள்வி

மா.இ.கா. இளைஞர் பிரிவு தலைவர் மோகனிடம் ஒரு கேள்வி.

எதிர்கட்சி இந்திய நாடளுமன்ற உறுப்பினர்கள் திடிர் பணக்காரர்கள் ஆகி விட்டார்கள். பங்களா வீடு, சொகுசு கார்கள் என்று exclusive-ஆக வாழ்கிறார்கள் என்று கூறியிருக்கிறீர்கள்.

இந்த 6 வருடங்களில் உங்களின் அபார வளர்ச்சி எத்தனை பேருக்கு தெரியும். உங்களுடைய பழைய வீடும் தற்போதைய புதிய பங்களாவும் எல்லோருக்கும் தெரியுமா? உங்கள்டைய புதிய கார் பற்றி தெரியுமா ....? உங்கள் தம்பி D.A.P டி.கண்ணன் என்பது எல்லோருக்கும் தெரியுமா...? உங்கள் தம்பி லிம் கியட் சியங்கின் செயலாளர் என்பது எத்தனை பேருக்கும் தெரியும் ....? உங்கள் தம்பி D.A.P சார்ப்பில் Kg.Tungku PJ தொகுதியில் நின்று தோற்று போனது எத்தனை பேருக்கு தெரியும் .....?

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலா நீங்கள் மா.இ.கா.வில் இணைந்தீர்கள்...?


இந்த வார கோபம்

கோபம் 1. ஆற்று பாலம் விழுந்து 3 சிறுமிகள் பலி. துயர சம்பவம் நடந்த பின்னரே அதற்கான காரணம்,விசாரணை,மாநில தேசிய அளவிலான விசாரணை என அமர்களபடுவது வாடிக்கையும் வேடிக்கையும் ஆகிவிட்டது. இம்மூன்று குடும்பத்தினருக்கு யார் பொறுப்பான பதில் சொல்வது.

கோபம் 2. கடந்த பொது தேர்தலில் அதிகமான இந்தியர்கள் எதிகட்சிசார்பாக வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்கள். இவர்கள் ம.இ.காவை போல் அல்லாமல் உண்மையான சமுதாயத்திற்கு சேவை செய்ய போவதாக உறுதி சொன்னார்கள். 20 இந்திய எம்.பி.கள் கொண்ட குழு எம்.ஐ.இ.டி. பற்றி விசாரிப்பதற்கு மா.இ.கா கட்டடத்திற்கு போக போவதாக சொன்னார்கள். ஆனால் ஒரே ஒரு இந்திய எம்.பி. மட்டும் போய் நமக்கு கோபத்தை உண்டு செய்திருக்கிறார்கள். உள்ளூரில் உள்ள வாய் சவடால் பேசும் சந்தியாகோ,மணிவாசகம்,மாணிக்கவாசகம்,குலசேகரன் இன்னும் பலர் ஆதவன் படம் பார்க்க போய் விட்டார்களா என்ன?


கோபம் 3. இந்திய தூதரகம் தொட்ங்கிய கலை கலாச்சார மன்ற விழாவில் நிறைய தமிழர்கள் முகம். தொடக்கி வைத்தது அமைச்சர் கோகிலன் பிள்ளை. தமிழர் உணர்வுகளை எப்போதும் இந்தியாவும் சரி இந்திய தூதரகங்களும் சரி மதிப்பதில்லை. அனால் இங்குள்ள தமிழர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் என்றால் தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள். சில மாதகளுக்கு முன்பு இதே தூதரகம் முன் ஈழ தமிழர்களுக்காக மறியல் செய்ததை எல்லாம் மறந்து விட்டனர் தமிழர்கள்.

இந்த வார ஜாலி

நேசா தங்களை ஏமாற்றி விட்டதாக நேசா பங்குதாரர்கள் தமிழ் பத்திரிக்கையில் அழுத்திருக்கிறார்கள் .... இது மிகவும் ஜாலியான ஒரு கதை ... மைக்கா ஹொல்டிங்ஸ் பற்றி அவர்களும் நேசா பற்றி இவர்களும் சொல்லும் கதைகள் மிகவும் சுவரசியமாக உள்ளன. இது மேலும் தொடர என் ஆவல்கள். இது போல பல கூட்டறவு சங்கங்கள் நிலையும் இதுதான். இதன் கூத்துகளையும் பிரசுரித்தால் இன்னும் ஜாலியான இருக்கும். குறிப்பாக சாமிவேலுவின் கே.பி.ஜே. இதில் தேசிய நிலநிதி கூட்டறவு மற்றும் தொழிலாளர் கூட்டறவு நாணய சங்கம் இரண்டையும் சேர்த்துக்கொள்ளாதீர்கள்..... இவ்விரண்டு கூட்டறவு சங்கங்களும் நமக்கு முடிந்த மட்டில் நன்மை செய்து வருகிறது. இவ்விரண்டு சங்கங்களுக்கும் நமது வாழ்த்துக்களும் வணக்கமும்.

இந்த வார குட்டு

எல்லா தமிழ் தினசரிகளுக்கும் இந்த வார பலமான குட்டு. நான் எப்பவாது தமிழ் பத்திரிக்கைகளைக் குறை சொல்லிவிட்டால் என் மீது கடுப்பாகி விடுகிறார்கள். நேற்று மூன்று தமிழ் தினசரி வாங்கினேன்(திபாவளி என்பதால்). ஒரு பக்கத்தில் கூட முழவதுமாய் செய்தி கிடையாது. இந்த தலைவர் வாழ்த்து செய்தி, அந்த தலைவர் வாழ்த்து செய்தி, தலைவர் அல்லாதவர் வாழ்த்து செய்தி, வாரியத்தலைவர் வாழ்த்து செய்தி, வாரியம் அல்லாத தலைவர் வாழ்த்து செய்தி,விளம்பரங்கள்,தொலைகாட்சி வானொலி நிகழ்ச்சிநிரல்,சினிமா செய்தி,தமிழ் நாடு அரசியல் செய்தி..... இதில் தமிழ் பத்திரிக்கை வாங்க வில்லை என்றால் முகத்தில் குத்துவது போல் பேசுவது. தயவு செய்து உங்கள் எல்லா பணிகளுக்கும் நடுவில் செய்திகளையும் போடுங்கள்..... இந்த நிலை மாறும் நிலை என்று வரும்(உபயம்: உன்னை போல் ஒருவன்). அதுவரை இந்த தீபாவளி சிறப்பு குட்டு...

இந்த வார பாராட்டு.

இந்த வார பாராட்டு நமது பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்களுக்கே. 'இந்திய மக்களின் தேவைகளையைப் பூர்த்தி செய்வதில் மா.இ.கா வெற்றி அடைந்துள்ளது என்று சொல்ல மாட்டேன்.' என்று பகிரங்கமாக மேடையில் தெளிவாக சொன்னதற்கு.

மஇகாவில் ஒரு நாடகம் நடக்குது எலேலங் கிளியே

இப்போது மாஇகாவில் நடக்கும் நாடகத்தைப் பற்றி சில கேள்விகள் சில பதில்கள்.
கேள்வி ஒன்று : சாமிவேலுவும் சோதி நாதனும் மிக நெருக்கமானவர்கள். எப்படி? சாமிவேலுவின் தம்பி மறைந்த பழனிவேலுவின் மனைவின் தம்பிதான் இந்த தெலோக் கேமாங் சோதிநாதன். சில வருடங்களுக்கு சாமிவேலுவின் அரசியல் செயலாளராகவும் சோதி இருந்துள்ளார். சாமிவேலு எது சொன்னாலும் சோதி கேட்பார், சோதி எது சொன்னாலும் சாமி கேட்பார்.

கேள்வி இரண்டு: பிறகு ஏன் மஇகாவில் சர்சைகள், துரோகி போன்ற வார்த்தைகள். சாமிக்கும் சோதிக்கும் சண்டை? சண்டை ஏதும் இல்லை. நடக்க போகும் ம இ கா தேர்தலுக்கு நடக்கும் நாடகம். எப்படி? சாமிவேலுவின் நேரடி ஆதரவை பெற்ற பழனிவேலுவை சுப்ரா எதிர்கிறார். சாமிவேலு மீது வெறுப்பில் உள்ள கோஷ்டிகள் சுப்ராவிற்கு ஓட்டு போடுவார்கள். சோதியை சாமிவேலுவின் எதிர்ப்பாக காட்டினால் சுப்ராவிற்கு விழும் ஓட்டுகள் சோதிக்கு போகும். அடுத்து சோதிக்கு ஓட்டு போட்ட சாமிக்கு எதிர்ப்பான கோஷ்டிகளை மெல்ல வெட்டி எடுப்பார்கள்.
பிறகு ஏன் பழனிவேலுவை சாமி தேர்தலில் நிறுத்த வேண்டும்? வேறு எதற்கு சாமிக்கு உண்மையான ஆதரவு யார், எதிர்ப்பு யார் என தெரிந்து கொள்வதற்கு தான்.

உண்மையான லைன் ஆப் இதுதான். தலைவர் சோதிநாதன். துணைத்தலைவர் வேள்பாரி. உதவி தலைவர்கள் தேவமணி,சரவணன் மற்றும் ஏனைய ஒருவர்.

இந்த தேர்தலில் சோதி வெற்றி பெற்றால் அடுத்த தலைமை மாற்றம் மேல் சொன்னபடிதான்.

மா இ கா நீண்ட பாரம்பரிய கட்சி. சுதந்திர கால கட்சி. அரசாங்கத்தில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒரே இந்தியர் கட்சி.

இன்று உள்ள ம இ கா தலைவர்களை அகற்ற வேண்டுமே தவிர, கட்சியை எதிர்ப்பது அல்ல. இதற்க்கு யாரவது வழி சொல்வார்களா?

இந்த வார காமெடி

பாரிசான் நேஷனலுக்கு ஓட்டு போட்டால் சொர்கத்ததுக்கு போகலாம். - துணைபிரதமரின் செய்தி. ......... சொர்கத்துக்கும் போகலாம்.